வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (10/03/2018)

கடைசி தொடர்பு:03:00 (10/03/2018)

'பெரியார் சிலையை எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு பார்க்கட்டும்' - முத்தரசன்  ஆவேசம்!

ஒரு பாசிச அரசு அமைந்தால் எப்படி இருக்கும் என்பதைத்தான் திரிபுராவில் தற்போது பார்க்கிறோம், தமிழகத்தில் பெரியார் சிலையை எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு பார்க்கட்டும், அதன்  பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆவேசமாக பேசியுள்ளார்.   

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது விருதுநகர் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள இராஜபாளையம் வருகை தந்தவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், நான்கு மாநில உயர் அதிகாரிகளை கூட்டி கூட்டம்  நடத்தியது தேவையற்ற வெட்டிக் கூட்டம். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.  ஒரு பாசிச அரசு அமைந்தால் எப்படி இருக்கும் என்பதைதான் தற்போது திரிபுரா மாநிலத்தில் நாம் பார்க்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்தான் குறியாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பெரியார் சிலையை எந்த கொம்பனாக இருந்தாலும் தொட்டு பார்க்கட்டும், அதன்  பின் விளைவுகளை  சந்திக்க வேண்டும்'' என்றும்  பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க