''ஹெச்.ராஜா இன்றைய ஸ்பெஷல்..!'' ட்விட்டர் பக்கத்தில் அவரது பதிவுகள்

ஹெச் ராஜா


பா.ஜ.க தேசிய செயலாளரும் கேரள மாநில பொறுப்பாளருமான ஹெச்.ராஜா, தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அன்றாடம் அரசியல் விமர்சனங்களை எழுதி வருகிறார். பெரியார் சிலை பிரச்னைக்கு பிறகு அவரது சமூக வலைத்தள பக்கங்கள் பலராலும் கவனிக்கப்படுகிறது. இப்போது அவர், தனது முகநூல் பக்கத்தில் சற்று ஓய்வில் இருந்தாலும், ட்விட்டர் பக்கத்தில் ரொம்பவும் பிஸியாகவே இருக்கிறார். மார்ச்  9 ஆம் தேதி அவர் போட்ட பதிவுகளை பல ஆயிரம் பேர் பாலோ செய்துள்ளார்கள். இன்று அவர் பதிவிட்ட நான்கு பதிவுகளை அப்படியே வாசிப்போம்.

* முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மகன் கார்த்திக்கிற்கு மீண்டும் 3 நாட்கள் சி.பி.ஐ காவல் நீட்டிப்பு.  முழு விசாரணைக்குப் பின் சீனியர் சிதம்பரம் கைதாகலாம். கார்த்தி சிதம்பரம் செய்த தவறுகள் சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது.

* மாணவி அஸ்வினி படுகொலை மிருகத்தனமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

* இன்று மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சகம் கூட்டியுள்ள கூட்டம் தேவையற்றது என்கிறார் தம்பிதுரை அவர்கள். அப்படியானால் தமிழக அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்குபெறுவதை இவர் ஏற்கவில்லையா?

* பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்.

ஹெச்.ராஜா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!