'எல்லோரும் குடும்பத்தோடு வந்துடுங்க' - கிராமம் கிராமமாக திருமண பத்திரிகை கொடுக்கும் அமைச்சர்!

''எல்லோரும் குடும்பத்தோடு திருமண விழாவுக்கு வந்துடுங்க, மறந்துடாதீங்க, மணமக்களை ஆசிர்வதித்துட்டு செல்லுங்க, அப்பத்தான் நான் சந்தோஷப்படுவேன்'' என்று ஒவ்வொரு கிராம மக்களிடம் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள ஆர்.பி.உதயகுமார்.

ஆர் பி உதயகுமார்

ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகிற 30-ந் தேதி மதுரை பாண்டி கோயில் பகுதியில் நடைபெறும் விழாவில் தன் சொந்த செலவில் 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைகளோடு இலவச திருமணம் செய்து வைப்பதாக அறிவித்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதற்கான ஏற்பாடுகளில் தற்போது இறங்கியுள்ளார். சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய காதணி விழாவை விட இவ்விழாவை பிரமாண்டமாக நடத்தி முதலமைச்சரிடம் பேர் வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த விழாவை நடத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்காக மக்களை திரட்டும் வகையில் தற்போது தன் தொகுதிக்குயிலுள்ள கிராம மக்களிடம் நேரடியாக சென்று பத்திரிக்கை வழங்கி வருகிறார். 
    
இன்று புளியம்பட்டி, கெஞ்சம்பட்டி, டி.குன்னத்தூர், ரெங்கபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு பத்திரிகை வழங்கினார். காசு கொடுத்தால் கட்சி நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வருவவது நடைமுறையில் இருந்தாலும், அமைச்சரே வந்து நேரில் அழைப்பதை மக்கள் சென்டிமெண்டாக பார்க்கிறார்கள். இலவச திருமணத்துக்கு மணமக்களின் உறவினர் போல அழைப்பதை பலரும் பாராட்டுறார்கள். பொதுமக்களும் இதுதான் சமயம் என்று, கிராமங்களிலுள்ள குடிநீர், சாலை பிரச்சனைகளை அமைச்சரிடம் கூறியவுடன், உடனே அதிகாரிகளை அழைத்து அவைகளை நிவர்த்தி செய்து அசத்துகிறார். வருகிற 30-ம் தேதி முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளும் இவ்விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு இப்போதிருந்தே வேலைகளை செய்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!