16-ம் தேதி முதல் சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சியும் கிடையாது! - விஷால் அதிரடி

வரும் 16-ம்  தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என விஷால் தெரிவித்துள்ளார். 

விஷால்

கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட போது, திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கேளிக்கை வரி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரியும், பிற மொழிப் படங்களுக்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்த, பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக புதிய திரைப்படங்களை வெளியிடாமல், தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், 16-ம் தேதி முதல் போஸ்ட் புரடெக்ஸன் பணிகள் கூட நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெப்சி அமைப்பின் ஒப்புதலோடு இந்த வேலைநிறுத்தம் நடக்கவுள்ள நிலையில், ஏற்கனவே கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் எனக் கூறி தியேட்டர் அதிபர்கள் போராட்டங்களை அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!