பிரேதப் பரிசோதனை முடிந்தது! - அஸ்வினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் படுகொலைசெய்யப்பட்ட அஸ்வினியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை கே.கே.நகரிலுள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்துவந்த மாணவி அஸ்வினியை இளைஞர் ஒருவர் கல்லூரி வாசலில் வைத்து குத்திக் கொலைசெய்தார். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அஸ்வினியின் உடல் இன்று பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது.

அஸ்வினியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயற்சிசெய்தனர். ஆனால், அழகேசனுக்கு உடனடியாக தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். பின்னர், காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து, உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!