வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (10/03/2018)

கடைசி தொடர்பு:15:46 (10/03/2018)

தறி குடோனில் கத்திக் குத்து! - வட இந்தியர் கைது

கொலை

தறி குடோனில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர், குடோன் மேற்பார்வையாளரை கத்தியால் குத்தியிருக்கும் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை அடுத்துள்ள சின்னியம்பாளையத்தில் இயங்கி வரும் தறி குடோன் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிவருகிறார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜினி திவாரி. இதே இடத்தில் ஒடிசாவைச் சேர்ந்த பிரகாஷ்குமார் மாலிக் என்ற இளைஞரும் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தார். வேலை நேரத்தில் இவ்விருவருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டவண்ணம் இருந்திருக்கின்றன. இந்நிலையில், நேற்றைய தினமும் வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் பெருங்கோபமடைந்த பிரகாஷ் குமார் மாலிக், குடோனில் கிடந்த கத்தி ஒன்றை எடுத்து ரஜினி திவாரியின் காதில் குத்தியிருக்கிறார். அதிகப்படியான ரத்தம் கொட்டியதால், சக ஊழியர்கள் ரஜினி திவாரியை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், இதுதொடர்பாக திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ்குமார் மாலிக்கை கைதுசெய்திருக்கிறார்கள்.