வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (10/03/2018)

குக்கர் சின்னம் கிடைக்க மதுரை சென்டிமென்ட் காரணமா?

`மதுரை சென்டிமென்ட் மற்ற அரசியல்வாதிகளுக்கு எப்படியோ, ஆனால் எங்கள் மக்கள் செல்வருக்கு பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகுது’ என்று சிலாகிக்கிறார்கள், அவரின் ஆதரவாளர்கள். 

வெற்றிச் சின்னமான குக்கரை வழங்கும்படி டெல்லி உயர் நீதிமன்றமே உத்தரவிட்டதால், தினகரனும் அவரது ஆதரவாளர்களும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்தத் தீர்ப்புபற்றிய செய்தி, தினகரன் மதுரையில் தங்கியிருந்தபோது வந்ததால், 'மதுரைதான் எனக்கு ராசியான ஊர். என்னுடைய அரசியல் பயணத்தின் ஒவ்வொரு நகர்வும் மதுரையிலிருந்தபோதுதான் நிகழ்ந்துள்ளது'' என்று நேற்று கட்சி நிர்வாகிகளுடன் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

dinakaran


விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று காலை மதுரை மாட்டுத்தாவணி அருகிலுள்ள ஹோட்டலில் தினகரன் தங்கியிருந்தபோது, குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் தொண்டர்கள் உற்சாகமானார்கள். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம்  அவர் மகிழ்ச்சியுடன் பேசிவிட்டுக் கிளம்பினார்.  

இதைப் பற்றி நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், 'அண்ணன், முதன் முதலில் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, மதுரையில் தங்கியிருந்துதான் பிரச்சாரத்துக்குக் கிளம்புவார். அதில் வெற்றிபெற்றார். அவர் துணைப்பொதுச்செயலாளராக வர வேண்டுமென்ற குரல் மதுரையிலிருந்துதான் கிளம்பியது. பொய் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது, அதை எதிர்த்து முதல் போராட்டம் மதுரையில்தான் நடந்தது. அனைவரும் வியக்கும் வகையில் முதல் அரசியல் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில்தான் நடத்தப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிச் செய்தியும்,  அண்ணன் மதுரையிலிருந்தபோதுதான் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, அனைவரும் எதிர்பார்த்த குக்கர் சின்னமும் அண்ணன் மதுரையிலிருந்தபோதுதான் சட்டபூர்வமாகக் கிடைத்துள்ளது' என்று பெரிய பட்டியலே இடுகிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க