அஸ்வினி கொலையாளி அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

சென்னை  கே.கே.நகரில் தனியார் கல்லூரி அருகில் மாணவி அஸ்வினியைக் கொலை செய்த அழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. 


கே.கே.நகரில் இருக்கும் தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை, அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் நேற்று கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த அஸ்வினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. மாணவி அஸ்வினியைக் கத்தியால் குத்திய அழகேசன் என்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் சிலர் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை  15 நாள்கள் நீதிமன்றக்  காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!