நெல்லையில் க்ளோகோமா விழிப்புஉணர்வு மனித சங்கிலி!

சர்வதேச கண்நீர் அழுத்த நோய் குறித்த விழிப்பு உணர்வு வாரத்தையொட்டி நெல்லையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழிப்புஉணர்வு மனிதச் சங்கிலி

கண்நீர் அழுத்த நோயான `க்ளோகோமா' குறித்து பொதுமக்களிடம் தெரியப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் விழிப்புஉணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மார்ச் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நெல்லையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பாக 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண்நீர் அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு வகையில், கண்நீர் அழுத்த நோய் மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதனை நெல்லை சரக காவல்துறை டி.ஐ.ஜி-யான கபில்குமார் சாரட்கர் தொடங்கி வைத்தார். அகர்வால் குழுமத்தின் தென் மண்டல மருத்துவர் லயனல்ராஜ், இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர். ஆதம்அலி, டாக்டர்.அன்புராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில், சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி, இதயஜோதி நர்சிங் கல்லூரி, ஆலடி அருணா நர்சிங் கல்லூரி, புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவிகள் கலந்துகொண்டு க்ளோகோமா நோய் குறித்த பதாகைகளுடன் மனிதச் சங்கிலி கலந்து கொண்டனர்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!