மதுரையில் பிளஸ் 2 மாணவனுக்கு கத்தி குத்து - சகமாணவர்கள் வெறிச்செயல்!

 

கத்தி குத்து

மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ பயிலும் மாணவர்களுக்கிடையே முன்விரோதம் காரணமாக, பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்த அர்ஜூன் என்ற மாணவனை அதே பள்ளியில் பயிலும் கார்த்தி, சரவணன் ஆகிய இருவர் கத்தியால் குத்தினர். இதனால், அர்ஜூனின் விரல்கள்  மற்றும் உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரத்தக்காயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ஜூன் கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.  

இந்நிலையில், நேற்று மதுரை எஸ்.பி., மணிவண்ணன் சம்பவம் நடந்த பள்ளியில் ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். அதனை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பள்ளியில் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மாணவனை கத்தியால் குத்திய சகமாணவர்களை சுண்ணாம்பூர் பகுதியில் கைது செய்து காவல்நிலையத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக வேறு எந்த பிரச்சனையும் நடைபெற்றுவிடக்கூடாது என்று காவல்துறையினரை பாதுகாப்பில் இருக்க எஸ்.பி உத்தரவிட்டதகவும் தகவல் கிடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!