வெளியிடப்பட்ட நேரம்: 00:11 (11/03/2018)

கடைசி தொடர்பு:00:11 (11/03/2018)

"10 பேரை வெட்டிச் சாய்த்த பரம்பரையிலிருந்து வந்தவன் நான்" - அய்யாக்கண்ணு ஆவேசம்!

 'எங்களுடைய 100 நாள் பிரச்சார பயணத்தினை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பா.ஜ.க-வினர் செயல்பட்டு வருகின்றனர்' என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், தமிழர் உழவர் பேரியக்கம் சார்பில் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அய்யாக்கண்ணு, "சுப்ரீம் கோர்ட் போட்ட ஆர்டரை மதிக்காத ஒரே பிரதமர் மோடி தான். தமிழகத்தை பாலைவனமாக மாற்றனும்னு அவங்க ஒரு முடிவுல இருக்காங்க. விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தாலும் பரவாயில்லை. எப்படியாவது கர்நாடகாவுல ஆட்சியைப் பிடிக்கணும்னு மோடி நினைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்யவேண்டும் என பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அப்படி செய்தால் பாராளுமன்றத்துல யார் அழுத்தம் கொடுப்பா!... அது மோடி அரசங்கத்துக்கு இன்னும் வசதியாக அல்லவா போய்விடும். 

அதனால பாராளுமன்றத்துல இருந்து தினமும் கத்திக்கிட்டே இருந்து சபையை முடக்கினால் தான் அவங்களுக்கு அழுத்தம் ஏற்படும். திருச்செந்தூர்ல நான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் என்னை தாக்கினார். இயேசு சொன்னதைப் போல ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தை காட்டு என்று நான் அமைதியாக இருந்துவிட்டேன். அதனால என்னை கோழைன்னு நினைச்சுக்காதீங்க. என்னோட தாத்தா பெரியகுளத்துல 10 பேரை வெட்டி சாய்ச்சவர், அப்படிப்பட்ட வீரப் பரம்பரையிலிருந்து வந்தவன் நான். எங்களுடைய 100 நாள் விழிப்புணர்வு பயணம் கெட்டுப் போய்விடக் கூடாது என்ற காரணத்திற்காக அமைதியாக இருந்துவிட்டேன். இன்றைக்கு கூட எங்களுடைய ஆட்களை பா.ஜ.க-வினர் தாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து எங்களுடைய பயணத்தை முடக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.