'சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி ஸ்டாலின் பேசக்கூடாது!' - ஓ.பி.எஸ் விளாசல்

சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் சொல்வது அப்பட்டமான பொய் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்

தன் ஆதரவாளர் சாலைமுத்து வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று (10/03/2018) இரவு மதுரை வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காவிரி விவகாரத்தில் ஆறு வார காலத்துக்கு பின்னால் என்ன நடக்கிறது என பார்த்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிப்போம். உச்சநீதிமன்றம் மத்திய அரசை ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி முறைப்படுத்தும் குழுவும் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் சொல்வது அப்பட்டமான பொய். தி.மு.க ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போனதற்கு தினகரன் பத்திரிகை எரிப்பு உதாரணம். திமுக ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பதை ஸ்டாலின் திரும்பி பார்க்க வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே சாதி, மத கலவரங்கள் இல்லை. டி.டி.வி தினகரன் காண்கின்ற பகல் கனவுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது" என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!