வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:07:30 (11/03/2018)

''பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள்... வேடிக்கை பார்க்கிறார்கள்..!'' கனிமொழி உருக்கம்

கனிமொழி

''பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள், ஆட்சியாளர்களே'' என்று கனிமொழி எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனிமொழி எம்பி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீசார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிக்கு படிக்கவும் செல்ல முடியவில்லை. வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவும் முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெண்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் அவல நிலையை உருவாக்கிவிடாதீர்கள், ஆட்சியாளர்களே'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க