’ஹெச்.ராஜாவை பேசவைக்கிறார்கள்! - திருமாவளவன் தாக்கு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்ட மகளிர் விடுதலை இயக்க மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கத்தில் நேற்று (10/03/2018) நடைப்பெற்றது. 

திருமாவளவன்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பு நடத்திய பெண்களும் அர்ச்சகராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் விடுதலை இயக்க மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதற்கான காரணங்களை மத்திய அரசு தேடி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது. அதே போல ஆணவப் படுகொலைக்கள் அதிகரித்து வருகிறது.
 
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதற்கு தனி புலனாய்வு குழு அமைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். 

தமிழகத்தில் ஹெச்.ராஜாவை வன்முறையாக பேச வைத்து மத்திய பாரதிய ஜனதா கட்சியினர் வேடிக்கை பார்த்து வருகிறது. பா.ஜ.க.,வின் நோக்கம் தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து ஆட்சியை பிடித்து விட வேண்டும் என நினைத்து ஹெச் ராஜாவை பேச வைத்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க., வன்முறையை மட்டுமே தூண்டி விட முடியும். ஆட்சியை ஒரு போதும் பிடிக்க முடியாது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!