’ஆரம்பித்த இடத்தில்தான் அஸ்திவாரம் இருக்கனும்!’ - டி.டி.வி.தினகரனின் பூதாகர செயல்பாடு ஆரம்பம்

மதுரையில் வரும் 15ம் தேதி நடைபெறும் விழாவில் டிடிவி தினகரன் தன் புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். 

தினகரன்

டி.டி.வி தினகரன் பல சட்டரீதியான சவால்களையும், அரசியல் போட்டிகளையும் தாண்டி ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்னரே பல அரசியல் மேடைகளில் தலைமை ஏற்று பேசினார். யாரையும் கடுமையாக சாடாமல்  தன் கட்சி பயணத்தை தொடர்ந்தார். அதற்கு அச்சாரமிட்ட மதுரை மாவட்டம் மேலூரில்தான் தன் முதல் எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டத்தை மாநாடு போல துவங்கினார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது அதனை மக்களிடையே அதிகாரப்பூர்வாக அறிவித்தும் தன் வெற்றியும் பகிர்ந்துகொள்ள உள்ளார். மேலும், டிடிவி தினகரன் வருகிற 15ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரும் 15 தேதி மேலூர் எஸ்.பி.ஆர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சியை நடைபெற உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இதே இடத்தில் தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுகூட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எம்.எல்.ஏ சாமி ஆதராவாளர்கள் மனு அளித்தே அனுமதி பெற்றனர். இந்நிலையில் தற்போது நடத்த உள்ளவிழாவிற்கு இன்னும் போலீஸ் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அந்நிகழ்ச்சியின் கால் கோள் விழா இன்று நடைபெற்றது.

தினகரன்

தினகரன் புதிய கட்சி தொடக்க விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி..

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சாமி , முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் அதில் கலந்துகொண்டனர் . இது தொடர்பாக பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என டி.டி.வி தினகரன் தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!