’தில்லு முல்லு முன்னேற்றக் கழகம்!’ - தினகரன் புதிய கட்சிக்கு ஜெயக்குமார் பரிந்துரைக்கும் பெயர்

டி.டி.வி.தினகரன் அணிக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்கிட தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. 

ஜெயக்குமார், தினகரன்

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையில் விருவிருப்பாகக் களம் இறங்கியுள்ளார் தினகரன். மேலும், புதிய கட்சி தொடங்கும் வேலை ஒருபுறம், கட்சியின் பெயர், கொடி, கொடியின் நிறம் உள்ளிட்ட வேளைகளில் மிகவும் பிசியாக செயல்பட்டுள்ளார். 

இந்த நிலையில், வரும் 15-ம் தேதி மதுரையில் புதிய கட்சியின் பெயரை தினகரன் அறிவிக்க உள்ளதாக அறிக்கை வெளியிடுள்ளார். தினகரன் தொடங்கும் புதிய கட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார். அதில், ’தினகரன் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு தில்லு முல்லு முன்னேற்றக் கழகம் என்றுதான் அவர் பெயர் வைக்க வேண்டும்’ என்றார். மேலும், காவிரி மேலாண்மை குறித்த கேள்விக்கு, காவிரி விவகாரத்தில் தொடர்ந்து போராடி வருவது அ.தி.மு.க., தான். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசுபவர்கள் நாங்கள் இல்லை’ என்று காவிரி நதிநீர் பங்கீடு குறித்த எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கும் பதில் அளித்தார் அமைச்சர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!