பெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது! - கவிஞர் திலகபாமா குற்றச்சாட்டு

’தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. திரைப்படத்திலும், திரைக்கு பின்னாலும் பெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என கவிஞர் திலகபாமா தெரிவித்துள்ளார். 

திலகபாமா

அமெரிக்காவில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பா.ம.கவின் துணைச்செயலாளரும், கவிஞருமான திலகபாமா இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஆண்டுக்கான மகளிர் மாநாடு  நியூயார்க் நகரில் மார்ச் 12ஆம் தேதி முதல் 16ஆம்தேதி வரை  நடைபெறுகிறது. இதில் பசுமைத் தாயகம்  சார்பில் சௌம்யா அன்புமணியும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நானும் கலந்து கொள்கிறோம். இதில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேச உள்ளோம்.

தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. திரைப்படத்திலும், திரைக்கு பின்னாலும் பெண்களிடம் காதல் எனும் வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான்கு வயது குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கர்பிணிப் பெண் பலியாக காவல்துறையே காரணமாக உள்ளது. விரைவில் தமிழகமெங்கும்  பெண்களுக்கான  விழிப்புணர்வு  கருத்தரங்குகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்த  உள்ளது.'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!