வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:19:31 (11/03/2018)

``ஆணவக் கொலைகளைத் தடுக்கும் நோக்கில் புதிய செயலி’’ - ஓர் அசத்தல் முயற்சி

தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆவண கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அதில் உடுமலைப்பேட்டை சங்கர் கொலை தமிழகத்தையே உலுக்கியது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்ட போதும், ஆணவக் கொலைகள் தொடர் நிகழ்வாகி வருகிறது. பொது இடங்களில் காதலர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 

இந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்காகவும், ஆணவக் கொலைகளை தடுப்பதற்காகவும், சமூக ஆர்வலர் அமைப்பினர் இணைந்து  “காதல் அரண்” என்ற   செயலியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் காதலர்கள் திருமணம் செய்ய நினைத்தாலோ அல்லது திருமணம் முடிந்த பின்னர் அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என நினைத்தாலோ இந்தச் செயலியில் பதிவு செய்தால், காதலர்களின் பகுதியில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் அந்தக் காதலர்களுக்கு பாதுகாப்போ, திருமணமோ செய்து வைப்பார்கள். இதுவே இந்தச் செயலியின் நோக்கம். இதுவரை இந்த அமைப்பினர் 10-க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளதாகவும், இதில் பதிவு செய்யும் மேலும் பல காதலர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்க இருப்பதாகவும் இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் ஆவணக்கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தச் செயலியின் மூலம் ஆணவக் கொலைகள் நடைபெறுவதைத் தடுக்க முடியும் என நம்புவதாகவும் கூறியுள்ளனர்.