`இரட்டை இலையை தினகரன் நிச்சயம் பெறுவார்!’ - தங்கத் தமிழ்செல்வன் நம்பிக்கை

''விரைவில் வரவுள்ள  18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்புக்கு பிறகு, இரட்டை இலைச் சின்னத்தை தினகரன் நிச்சயமாக பெறுவார் என்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத் தமிழ்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார். 

தங்க தமிழ்செல்வன்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தினகரன் அணி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தங்கத் தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மீண்டும் முதலமைச்சர் ஆகும் கனவிலும், மோடியின்  உத்தரவாலும் எடப்பாடி அணியில் வந்து ஓ.பி.எஸ். இணைந்தார். ஆனால், அவரின் கணவு பலிக்கவில்லை, எடப்பாடியோ முதலமைச்சர் பதவியை இறுக்கிப் பிடித்து கொண்டிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய தகுதி தமிழக அரசுக்கு இல்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு பிறகு, இரட்டை இலையை தினகரன் நிச்சயமாகப் பெறுவார். ஓ.பி.எஸ்ஸின் பகல் கனவு என்னாகும் என்பது அப்போது தெரியும். மேலூரில் தினகரனால் தொடங்கவுள்ள கட்சிக்கு  மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. எடப்பாடி ஆட்சியில்  சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று முன்பு சொன்ன ஒ.பி.எஸ், இப்போது  சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று சொல்வது விந்தையிலும் விந்தை'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!