குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

காட்டுத்தீயில் சிக்கிய பெண்களை மீட்க,போர்க்கால நடவடிக்கையைமேற்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

கே.பாலகிருஷ்ணன்


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்டகாட்டுத்தீயில் சென்னையில் இருந்து மலையேறும்பயிற்சிக்கு சென்ற ஐடி ஊழியர்களும், மாணவிகளும் சிக்கிக் கொண்டுள்ள அதிர்ச்சியான செய்திவந்துள்ளது. காட்டுத்தீயில் இருந்து ஒரு பகுதியினரை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளார்கள். மேலும் சிலர் காட்டுத்தீக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. சிக்கிக் கொண்டுள்ள பெண்களை மீட்கவும், காட்டுத்தீயை அணைப்பதற்கும் ராணுவ  ஹெலிக்காப்டர்களை உடனடியாக அனுப்பி வைத்திடவேண்டும். தீயில் சிக்கிக்கொண்டுள்ளவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் அவர்களது உறவினர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். அதுகுறித்த தகவலை வெளியிட்டு பதற்றத்தை தணிக்க வேண்டும்.

குரங்கணி தீ விபத்தில் மீட்டுப் பணி

தீக்காயம் அடைந்தவர்களுக்கு முழு வேகத்தில் சிகிச்சை அளித்திட மருத்துவக்குழுக்களையும், அனைத்து வகையான ஆம்புலன்ஸ்களையும் அனுப்பி வைத்திடவேண்டும். இந்த காட்டுத்தீ இரண்டு மூன்று நாட்களாகஇருந்த நிலையில் அதனை அணைக்க முயற்சிமேற்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. காட்டுத்தீ உள்ள பகுதியில் எப்படி பெண்களை அனுமதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.  இவைகளைப்பற்றியெல்லாம் உரிய விசாரணை நடத்தவேண்டியுள்ளது. இருப்பினும் உடனடியாக தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கும், மீண்டவர்களுக்கு உயர்தரசிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!