Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உங்களால் முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்' - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

தமிழகத்தில் ஆட்சி செய்யும் உங்களால் முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் என பிரேமலதா திருச்சியில் ஆவேசமாக பேசினார்.
 
பிரேமலதா
 
தே.மு.தி.க சார்பில் திருச்சியில் மகளிர் தின விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர்களான கணேஷ், கிருஷ்ணமூர்த்தி, குமார், அவைத்தலைவர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் மகளிர் அணி நிர்வாகிகள் பேராசிரியர் சந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ சுபா.பார்த்தசாரதி, துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சகிதமாக கலந்துக்கொண்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.
 
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பெண் தொண்டர்கள் தான் தேமுதிகவின் பலம். யார் அரசியலுக்கு வந்தாலும் கவலையில்லை. இரண்டு ஆண்ட கட்சிகளுக்கு இணையான கட்சி தே.மு.தி.க தான்.  கமிஷன் கரப்சன் எனும், லஞ்சம் மற்றும் வசூலில் தான் இந்த ஆட்சி நடக்கிறது. நாம் கட்சியை சுலபமாக நடத்திவிடவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு கட்சி நடத்துகிறோம். ஆனால் நாம் ஒரு முறை தோல்வி அடைந்து விட்டதால் நம்மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் வந்தால் தேமுதிக யார் என நிரூபிப்போம். தினம் ஒரு கட்சிகள் முளைக்கிறது. அவை அனைத்தும் காணாமல் போகும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னும் பெண்களை பறிக்கொடுக்கப் போகிறோம். ஹாசினி, லாவண்யா, உஷா என இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோம். தற்போதைய எடுபிடி எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.  வழிப்பறி, கொலை, கொள்ளை எனச் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக்கிடக்கிறது. 
 
மகளிர் தினத்துக்கு முந்தினநாள், திருச்சியில் உஷா காவல்துறையைச் சேர்ந்த காமராஜால் இறந்துள்ளார். இந்த காமராஜ் அந்த துறைக்கே இழுக்கை ஏற்படுத்திருக்கிறார். தமிழகத்தில் காவல்துறை, காவு வாங்கும் துறையாக  மாறி இருக்கிறது. உஷா குடும்பத்தாரை நேரில் சந்தித்தேன். உஷாவின் மரணத்துக்கு காரணமான போலீஸ் காமராஜுக்கு தூக்கு வாங்கிக் கொடுக்க கோரிக்கை வைத்தனர். உஷாவை ஸ்கூட்டியில் துரத்திய காவலர் தலை கவசம் அணியாமல் சென்றது ஏன்?. தீவிரவாதிகள், கொலை செய்தவர்கள், குற்றவாளிகள் சுதந்திரமாக இந்த நாட்டில் அனுமதிக்கும்போது, தலை கவசம் அணியாமல் போனது குற்றமா?. ஹெல்மெட் போடாதவர்களுக்கு அபராதம் போடுங்கள், அவர்களை விரட்டுவது எப்படி சரியானது. காவல்துறைக்கு பெருமைச் சேர்த்தவர் விஜயகாந்த். ஆனால் இதுபோன்ற காரணங்களால் காவல்துறையை மக்கள் ஏளனமாகப் பார்க்கிற நிலைமை உள்ளது.
 
பிரேமலதா
 
தலைகவசம் போடவில்லை என போலீஸார் மக்களை துன்புறுத்துகிறார்கள். இதற்கு காரணம் ஒரு மாசத்துக்கு ஒரு கோடி வசூல் செய்ய எஸ்.பி, டிஎஸ்பிக்களுக்கு டார்கெட் கொடுப்பதாக தகவல். சென்னையில் கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் பல தகவல் வெளியாகிறது. பெண்கள் காதலிக்க தைரியம் இருக்கும்போது அவர்களையே கரம் பிடித்து வாழ்ந்து காட்டுங்கள். ஆண்களை ஏமாற்றாதீர்கள்" என்றார். தொடர்ந்து பேசிய அவர்," விஜயகாந்த் மீண்டும் உடல் நலம் தேறி வருவார். அவர் அதே வேகத்தில் நடக்கவும்,பேசவும் செய்வார் என மேடையில் கலங்கியதுடன்,  தேமுதிகவுக்கு காலம் கனிந்து கொண்டிருக்கிறது. நாம், எந்த லட்சியத்துக்காக கட்சி ஆரம்பித்ததோ அந்த இலக்கை அடையும் வரை பின்வாங்க மாட்டோம்  என்றவர், அனைவரும் தலை கவசம் அணிய வேண்டும். ஒரு சட்டம் இயற்றினால் அதை அரசாங்கம் மற்றும் நீதித் துறை தொடர்ந்து  அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி செய்யும் உங்களால் முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றி பேச எந்த தலைவருக்கும் தகுதி இல்லை. விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை பி.ஜே.பி பெண் நிர்வாகி அறைந்தார். செருப்பை தூக்கி காட்டியிருக்கிறார். அவரை அடிக்கிற அதிகாரத்தை யார் கொடுத்தது. ஆண்களுக்கு கொடுக்க வேண்டிய வேண்டிய மரியாதையை கொடுத்து ஆக வேண்டும். திருச்செந்தூர் விவகாரத்தில் பெண்ணின் செயல் கண்டிக்கத்தக்கது. 
 
இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. எப்போது முடியும். விஜயகாந்த் வந்தால் தான் முடியும். நாம் ஏன்  தண்ணீரை அண்டை மாநிலங்களிடம் கை ஏந்த வேண்டும். நாமே சேமிக்கலாமே. அந்த ஆட்சியாளர்கள் தகுதி இல்லாதவர்கள். இது வெயில் காலம்தானே கால்வாய் , நீர்வரும் வழியில் தூர் வாரலாம். அதைச் செய்ய மாட்டார்கள். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தரவில்லை. இரு கட்சிகளும் பொய் சொல்ல கற்றுக் கொண்டன. உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்கும் என்கிறார்கள். அதுவரை  ஆட்சி இருக்குமா என்றே தெரியவில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி என வரிகளால் மக்கள் வலிகளுடன்தான் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும். தங்க ஓடுன்கதைக்கூறி ஓட்டை தவறானவர்களுக்கு போட்டுவிடாதீர்கள்" என்றார். மேடையை விட்டு இறங்கும் முன்னதாகபிரேமலதா, வல்லரசு என ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டினார். மேலும் 10 லட்சம் மதிப்பிலான தையல் மிஷின், தள்ளுவண்டி, மண்வெட்டி, தராசு உள்ளிட்ட நல உதவிகளை ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ