வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (12/03/2018)

கடைசி தொடர்பு:10:34 (12/03/2018)

நடிகை ஸ்ரீதேவிக்குச் சென்னையில் இரங்கல் கூட்டம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் திரைப்பட துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியத் திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இவர் தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். தமிழ்த் திரையுலகிலும், இந்தி திரையுலகிலும் கொடி கட்டி பறந்தவர். அவர்  மரணமடைந்ததை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு அந்தப் பரபரப்பு அடங்கியது. இதன்பின் தனிவிமானம் மூலம் அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

இதற்கிடையே, ஸ்ரீதேவி பல மொழிகளிலும் நடித்துள்ளதால், அவருக்கான அஞ்சலி நிகழ்ச்சிகளை முக்கிய நகரங்களில் நடத்த அவர் கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். அந்த அடிப்படையில் அவர் இறந்து 16-ம் நாளான நேற்று சென்னையிலுள்ள க்ரவுன் ப்ளாசா ஹோட்டலில் மாலை ஆறு மணிக்கு அஞ்சலிக் கூட்டம்  நடந்தது. இதில் தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் வந்து போனிகபூருக்கும், அவர்களுடைய இரு மகள்களுக்கும் ஆறுதல் கூறினார்கள். இதில் ஏ.ஆர்.ரகுமான், பாக்யராஜ் உட்பட சிலர் மனைவியுடன் வந்து கலந்துகொண்டனர். முன்னதாக, சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் 16-ம் நாள் சடங்குகள் நடைபெற்றன. இதில், நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க