வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (12/03/2018)

கடைசி தொடர்பு:12:46 (14/03/2018)

கழிவுநீரில் நாற்றுநடும் போராட்டம் நடத்திய பெண்கள்!

பூவிருந்தவல்லி நகராட்சிக்கு எதிராக பொதுமக்கள் தெருக்களில் நாற்று நட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.

பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 14-வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில நாள்களாக கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

மேலும், அங்குள்ளவர்கள் கால்நடைகள் வளர்ப்பதாலும் அந்தக் கழிவுகளைக் கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து புகார் அளித்தும் தற்போது வரை எந்தவோர் அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதனால், அங்கு தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் அப்பகுதி மக்கள்  நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.