`அது, எங்கள் அருண் பிரபாகராக இருக்கக் கூடாது' - குடும்பத்தினர் கண்ணீர் பிரார்த்தனை #KuranganiForestFire

குரங்கணி மலையில் பற்றிய காட்டுத்தீயில் சிக்கி, இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தேனி மற்றும் மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மரணமடைந்த 9 பேரின் உடல்களைப்  பிரேதப் பரிசோதனைசெய்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று வரை மகிழ்ச்சியாகக் களித்து உறவினர்களிடம் உரையாடியவர்கள், காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டு மரணமடைந்த தகவல், அவர்களின் குடும்பத்தினரை  அதிர்ச்சியடையவைத்துள்ளது. 

அருண் குடும்பத்தினர் பிரார்த்தனை
   

மரணமடைந்துள்ளவர்களில் ஒருவரான அருண்பிரபாகரைப்பற்றி அவர்  நண்பரிடம் பேசியபோது, ''சென்னை பூந்தமல்லி கரையான்சாவடியில் வீடு உள்ளது.  தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அருணுக்குத் திருமணமாகி பத்து வயதில் பையன் இருக்கிறான். 2010-ம் ஆண்டிலிருந்து டிரெக்கிங் செல்வதில் ஆர்வம் ஏற்பட்டு, சென்னை பாலவாக்கத்திலுள்ள சி.டி.சி. கிளப்பில் உறுப்பினரானார்.

அருண் குடும்பத்தினர் பிரார்த்தனை

பல மலைப்பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார். எவ்வளவோ ரிஸ்கான டிரெக்கிங்க்கெல்லாம் சென்றுவந்துள்ளார். மலை ஏறுவதில் ஆர்வமும்  திறமையும் மிக்கவர். அவருக்கு இப்படி ஆகிவிட்டதை இப்போது வரை நம்ப முடியவில்லை. எப்பவும் துறுதுறுனு இருப்பார்'' என்று கவலையுடன் தெரிவித்தார். தற்போது அவர் குடும்பத்தினர், அது தங்கள் அருண் பிரபாகராக  இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்துக்கொண்டே மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  இதுபோல மரணமடைந்துள்ள, காயம்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர்களும் பதறியபடி வந்துகொண்டிருக்கிறார்கள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!