ஜெய்ஸ்ரீ-யின் பெற்றோருக்கு போனில் ஆறுதல் கூறிய கமல்! #KuranganiForestFire

குரங்கணி தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருபவர்களின் உறவினர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் போனில் ஆறுதல் கூறினார்.

கமல் ஆறுதல்

தேனி மாவட்டம், போடி வட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள், மலை ஏறும் பயிற்சி செய்தனர். நேற்று மதியம் கடுமையான  காட்டுத் தீ ஏற்பட்டது . கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் காப்பாற்றபட்டவர்கள், பல்வேறு இடங்களில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தற்போது 8 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களின் உறவினர்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசினார். 70 சதவிகித தீக்காயத்துடன்  சிகிச்சைபெற்றுவரும் சென்னை மடிப்பாக்கம் ஜெய்ஸ்ரீ (32) என்பவரின் தந்தை இளங்கோவனிடம் கமல் போனில் பேசுகையில், "தனியார் மருத்துவமனைக்குப் போகவேண்டாம். அரசு மருத்துவமனையிலேயே நல்லபடியாகப் பார்ப்பார்கள். எந்த உதவியாக இருந்தாலும் சொல்லுங்கள் நான் இருக்கிறேன். மருத்துவமனை முதல்வரிடம் நான் போனில் பேசுகிறேன். நல்லபடியாக குணம் அடைந்துவிடுவார்'' என  கமல் ஆறுதல் தெரிவித்ததாகக் கூறினார் இளங்கோவன்.

''கமல் போனில் தொடர்புகொண்டு பேசியது மனதிற்கு ஆறுதலாக உள்ளது'' எனவும் நம்மிடம் இளங்கோவன் தெரிவித்தார். 'எந்த உதவி வேண்டுமானாலும் அவர்களுக்கு செய்துகொடுங்கள்'' என்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மதுரை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அழகர் மற்றும் வி.பி.மணி தெரிவித்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!