ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு `செக்' வைத்த கிரண்பேடி!

``புதுச்சேரி செல்பவரா நீங்கள். உஷார்... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்.” புரியவில்லையா உங்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் அபராதம் விதிக்கப்படும் புதிய திட்டம் புதுச்சேரியில் இன்று அமலுக்கு வந்துவிட்டது.

புதுச்சேரி கிரண்பேடி- போலீஸ்

புதுச்சேரியில் சமீப காலமாகப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவர்களால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போக்குவரத்து போலீஸாருடன் நடத்திய ஆலோசனை கூட்டம் ஒன்றில், ``போக்குவரத்து விதிமீறல் இருந்தால் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்த வேண்டாம். அதற்குப் பதிலாகப் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து விதிமீறல் குறித்து சம்பந்தப்பட்டவருக்குப் புகார் அனுப்பி, பின்னர் போக்குவரத்து விதிமீறல் குறித்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.


போக்குவரத்து போலீஸ் அபராதம்

ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்படி புதுச்சேரியிலுள்ள அனைத்து சிக்னல்களிலும் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குபவர்கள், 3 நபர்களோடு இரு சக்கரவாகனத்தில் செல்பவர்கள், மது போதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகன எண்ணை வீடியோ பதிவு செய்யும் பணியைப் போக்குவரத்து போலீஸார் இன்று முதல் தொடங்கியுள்ளனர். அதேபோல விதிமீறல் படிவத்தில் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் அபராதம் கட்டுவதற்கான பணியைப் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!