வெளியிடப்பட்ட நேரம்: 02:32 (13/03/2018)

கடைசி தொடர்பு:10:26 (13/03/2018)

கியூவில் காத்துக்கிடக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்கள்..!

ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடந்த சில வாரங்களாகவே நிம்மதியிழந்து தவிக்கிறார்கள். சில வாரங்களாக ஏர்செல் எண்கள் வைத்திருப்பவர்கள் டவர் கிடைக்காமல், பெரும் சிரமத்தை அடைந்துள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல சி.இ.ஓ சங்கர நாராயணன், சில தினங்களில் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் நிறுவனம் சார்பில் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்தார். இப்படி அறிவித்தநாளில் இருந்து திருச்சி ஏர்செல் சேவை மைய அலுவலகங்கள் அனைத்து கடந்த சில தினங்களாகவே இழுத்து மூடப்பட்டிருந்தன.

ஏர்செல்

இந்நிலையில் இன்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளி எதிரே உள்ள ஏர்செல் சேவை மையம் அருகே வாடிக்கையாளர்கள் கூட்டம் குவிந்தது. இன்று திங்கள்கிழமை என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் கூட்டம் நீண்ட கியூவில் நின்றுகொண்டிருந்தனர். கூட்டம் அதிகம் ஆக ஆக அப்பகுதியில் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள் நம்மிடம் பேசும்போது, 'வாடிக்கையாளர்களான எங்களுக்கு திடீரென செல்போன் டவர் கிடைக்காமலும், போன் வருவதிலும் சிரமம் உள்ளது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம், யுபிசி எண் பெற்றுக்கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு மாறிவிடலாம் என அறிவித்தார்கள். ஆனால் கடந்த சில தினங்களாக யு.பி.சி எண் பெறுவதற்காக, ஏர்செல் சேவை மையத்தை தொடர்புக்கொண்டாலும், ஊழியர்கள், "எங்களுக்குகே டவர் இல்லை!" என்கிறார்கள். அடுத்து, வேறு செல்போன் நிறுவன எண்கள் வழியாக ஏர்செல் சேவை எண்களை தொடர்புக்கொண்டால், நாங்கள் கொடுக்கும் விபரங்கள் எங்கள் நிறுவன விபரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்கிறார்கள். இந்த செல்போன் எண்ணை, வங்கி, ரேஷன் கடை, ஆதார் எண் இணைப்புகள் மற்றும், அனைத்து அரசு மற்றும் தனியார் சார்ந்த இடங்களிலும் கொடுத்துள்ளோம். அதனால்தான் நாங்கள் வைத்திருந்த நம்பர் அவசியம் தேவைப்படுகிறது. இப்படி திடீர்னு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சேவையினை நிறுத்திக்கொள்வது மக்களை சிரமப்படுத்துகிறது. இந்த யு.பி.சி நம்பரை பெறுவதற்கு, ஒரு நாள் வேலையை விட்டுட்டு வந்து நம்பர் மாற்றவேண்டி உள்ளது. அப்படி கடந்த சில தினங்களாக நாயாக அழைகிறோம். எங்களின் சிரமத்தைப் போக்க ஏர்செல் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க