``எனது பரிசு இது!” - சசிகலா கிஃப்ட்டால் அசந்துபோன தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, கடந்த10-ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வை மேற்கொண்டார். சிறையில் பெண் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புஉணர்வு, சிறையில் கல்வி, தொழில்முறைகள்குறித்து முறையாகப் பயிற்றுவிக்கப்படுகிறதா என்ற ரீதியில் சிறையில் ஆய்வுசெய்தார். 

சசிகலா வழங்கிய பரிச

பரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறை அறைகளைப் பார்வையிட்ட ரேகா சர்மா, பெண் கைதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்களைப் பார்வையிட்டார்.  சிறையில், பெண் கைதிகளின் விருப்பத்தின் பெயரில், பேக்கரியில் உணவுப் பொருள்கள் தயாரிப்பது, தோட்ட வேலை செய்வது, டெய்லரிங் செய்வது போன்ற தொழில்கள் வழங்கப்படுகின்றன. இதற்காகத் தினமும் 30 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. 

சிறை அறைகளை பார்வையிடும் ரேகா சர்மா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா, சிறையில் காளான் வளர்த்தல், கைவினை அழகு சாதனப் பொருள்கள்  செய்வதில் ஈடுபட்டுவருகிறார். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, பெண் கைதிகள் உற்பத்திசெய்தவற்றை பார்வையிட்டபோது, சசிகலா குழுவினர் தாயாரித்திருந்த வளையல்கள் ரொம்பவே பிடித்துபோக, ஒரு செட் வளையல்களை வாங்கிக்கொண்ட ரேகா சர்மா, அதற்கான பணத்தை சசிகலாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் சசிகலாவோ, ’இதை எங்களுடைய பரிசாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பணம் வாங்காமல் கொடுத்தனுப்பியுள்ளார். 

கைவினை பொருட்கள்

சசிகலா சிறையில் கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுவருகிறார். இளவரசி கன்னடம் முழுமையாகக் கற்றுக்கொண்டு, சக கைதிகளிடம் கன்னடத்தில் பேசுவதாகக் கூறுகின்றனர். ஆனால் சுதாகரன், எந்த வேலையும் செய்யாமல் கைதிகளுடன் ஜாலியாக பொழுதைக் கழித்துவருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!