வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (13/03/2018)

கடைசி தொடர்பு:10:10 (13/03/2018)

வேலையின்றி வறுமையில் தவிக்கும் நெசவாளர்கள்! - போராட்டத்தில் குதித்த தி.மு.க

ராஜபாளையம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் உள்ள புனல்வேலி பகுதியில், நெசவுத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கில் மக்கள் வாழ்கிறார்கள்.  நெசவாளர்களுக்கு  கூட்டுறவு சங்கம் மூலமாக ஊடை நூல் வழங்காததால், மூன்று மாத காலமாக வேலையின்றி வறுமையில் தவித்துவருகின்றனர். இது சம்பந்தமாகப் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நெசவாளர்களுக்காக தி.மு.க உட்பட அனைத்துக் கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புனல்வேலியில் நடைபெற்றது.

தங்க பாண்டியன்


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று, தி.மு.க எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் பேசும்போது, ''நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், நெசவாளர்களுக்கு ஊடை நூல் வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இதனால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். விருதுநகரில் உள்ள ஏ.டி-யிடம்  கேட்டதற்கு, மும்பையில் ஆர்டர் செய்துள்ளோம், ஊடை நூல் இன்னும் வரவில்லை என்று இழுத்தடிப்பதால், அரசின் கவனத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டுசெல்லும்வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், மாபெரும் மறியல் போராட்டமாக இதை மாற்றுவோம், நெசவாளர்களின் கோரிக்கைகளை எங்கள் மாவட்டச் செயலாளர்மூலம் .கழகச் செயல் தலைவரிடம் அனுமதிபெற்று  சட்டசபையில் குரல் எழுப்பப்படும்'' என்றார். ஆர்ப்பாட்டத்தில் நெசவாளர்கள், பொதுமக்கள் திரளாகக்  கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின், நெசவாளர்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க