வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (13/03/2018)

கடைசி தொடர்பு:13:30 (13/03/2018)

மகன்கள் கண்முன்னே உயிரிழந்த தந்தை! சென்னை நீச்சல் குளத்தில் நடந்த சோகம்

சென்னை மெரினா நீச்சல் குளம்

 சென்னையில், மகன்களுக்கு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுத்தபோது தந்தை பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாரிமுனை, தம்புசெட்டி தெருவைச் சேர்ந்தவர், அபிபுல்லா. இவர், புதுப்பேட்டையில் உள்ள கடையில் மேனேஜராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு அமதுல்லா, அப்துல்லா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்னை  மெரினா நீச்சல் குளத்துக்கு இன்று காலை அழைத்துச் சென்றுள்ளார் அபிபுல்லா.

அப்போது அபிபுல்லா, திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அவரது மகன்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அபிபுல்லாவை மீட்டு, முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நீச்சல் பயிற்சியின்போது அபிபுல்லாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அபிபுல்லாவுக்கு, சபானா என்ற மனைவி உள்ளார்.

மகன்கள் கண் முன்னால் தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.