வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (13/03/2018)

கடைசி தொடர்பு:15:25 (13/03/2018)

`எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு; சொன்னா சிரிப்பீங்க!’ - கமலை கலாய்த்த தமிழிசை

மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு மெயில் வந்திருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை


நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு மெயில் மூலம் கட்சியில் இணைந்ததற்கானத் தகவல் அனுப்பப்படும்.

இந்நிலையில் இன்று திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய தமிழிசை, ‘கமல் தற்போது அவரின் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார். நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள். அந்த இமெயிலில் ‘நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என் மெயில் ஐடி எப்படி இவர்களுக்குக் கிடைத்தது. உறுப்பினர்களை சேர்க்க, கிடைக்கும் இமெயில் முகவரிக்கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யான கட்சி நடத்தி வருகிறார். கையில் கிடைக்கும் இமெயில் ஐடிக்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார்’ என்று கமலை கலாய்த்து இடைவிடாமல் சிரித்தார் தமிழிசை.  

தமிழிசை


அந்த உறுப்பினர் எண் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தமிழிசை ‘நான் ஏன் அந்த எண்ணையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நான் அதைப் புறந்தள்ளுகிறேன். அந்த இமெயிலை உங்களுக்குக் காண்பிக்கிறேன்...’ என்று கூறி லேப்டாப்பில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்த மெயிலைக் காண்பித்தார் தமிழிசை.

தமிழிசை

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது. `இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்பப்படும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க