வி.ஏ.ஓ-வை 7 ஆண்டுகள் சிறைக்குத்தள்ளிய 500 ரூபாய் லஞ்சம்!

திருமணத்துக்கு உதவித்தொகை வாங்கித் தருவதாக 500 ரூபாய் லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது அரியலூர் நீதிமன்றம்.

அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக ராமசாமி என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது இலுப்பையூர் எல்லைக்குட்பட்ட பொய்யாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் மகளுக்குத் திருமண உதவித்தொகை 5,000 ரூபாய் வாங்குவதற்காக விண்ணப்பம் அளித்திருந்தார். இந்நிலையில் உதவித்தொகைக்கான விண்ணப்பம் வழங்க 500 ரூபாய் லஞ்சமாகக் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி கேட்டுள்ளார்.

                             விஏஓ லஞ்சம்

லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாதுரை இது குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின் பேரில் அண்ணாதுரை ரசாயனம் தடவிய நோட்டுகளை ராமசாமியிடம் தரும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராமசாமியைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.                          

இவ்வழக்கு அரியலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். இதையடுத்து ராமசாமியைத் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீஸார் அழைத்துச் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!