வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (13/03/2018)

கடைசி தொடர்பு:18:42 (13/03/2018)

``மூன்றாவது முறையாக இணையும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி!’’ - அதிகாரபூர்வ அறிவிப்பு

சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.வி. ஆனந்த். 2009- ம் ஆண்டு சூர்யா- தமன்னாவை வைத்து இவர் இயக்கிய 'அயன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அயன் கூட்டணி 'மாற்றான்' திரைப்படத்தில் இணைந்தது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் படம் உருவாகவுள்ளது எனச் செய்திகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்தச் செய்தியை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சூர்யா 37

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் என்.ஜி.கே படத்தை முடித்தவுடன், சூர்யா, கே.வி.ஆனந்த் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கேவ் மிக் யூ ஆரி ஒளிப்பதிவை மேற்கொள்ள, கலை இயக்கநராக கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யா, கே.வி. ஆனந்த், ஹாரிஸ் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.