ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

`செல்போன் எண்ணுடன் பதிவுசெய்துள்ளார் தமிழிசை!’ - ஆதாரத்துடன் விளக்கிய மக்கள் நீதி மய்யம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது. 


நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு மெயில் மூலம் கட்சியில் இணைந்ததற்கானத் தகவல் அனுப்பப்படும். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் இணைந்தாக, இமெயில் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ``கமல் தற்போது அவரின் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார். நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள். அந்த இமெயிலில் ‘நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என் மெயில் ஐ.டி. எப்படி இவர்களுக்குக் கிடைத்தது?. உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக, கிடைக்கும் இமெயில் முகவரிக்கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யான கட்சி நடத்தி வருகிறார். கையில் கிடைக்கும் இமெயில் ஐடிக்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார்’ என்று கமலை கலாய்த்து இடைவிடாமல் சிரித்தார் தமிழிசை. `இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்பப்படும்’ என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தங்கள் இணையதளத்தில் செல்போன் எண், இமெயில் மற்றும் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட விவரங்களை அளித்து தமிழிசை பதிவு செய்ததற்கான புகைப்பட ஆதாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,``ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்துகொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹெச்.ராஜாவின் அட்மின் ஃபேஸ்புக் பதிவைப் போல் ஒருவேளை இதுவும் தமிழிசையின் அட்மின் கமல் கட்சியில் இணைவதற்காகப் பதிவு செய்திருப்பாரே? என்று கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!