வெளியிடப்பட்ட நேரம்: 02:10 (14/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (14/03/2018)

கௌசல்யா தாய்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி..!

கௌசல்யா தாய் அன்னலெட்சுமி உள்ளிட்ட மூன்று பேரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையிடு செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

திருப்பூரில் கடந்த 2016-ம் ஆண்டு சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலெட்சுமி உள்ளிட்ட மூன்றுபேர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிகோரி, உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், மூன்று பேரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.