ஊதிய உயர்வு கேட்டு துப்புரவுத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு..!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள், அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட வேண்டுமென்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் முழுவதுமுள்ள 445 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், அரசு ஆணை 2 (டி),11.10.2017 உத்தரவு 62-ன்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, நகராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யூ சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் 546 மனுக்கள் கொடுத்தனர்.     

இதுகுறித்து தெரிவித்த அவர்கள், 'தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சியில் பணிபுரியும்  ஊழியர்கள், கடந்த 40 ஆண்டுகளாகக் குறைந்த பட்சம் ஊதியம் திருத்தி அமைக்கப்படாமல், ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வேலையில் சேர்ந்தவர்களுக்கு தொகுப்பு ஊதியமாகக் கணக்கிடப்பட்டு, மாதச் சம்பளம் 5,618 ரூபாய் வழங்கப்பட வேண்டும். 1,500 மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி ஆபரேட்டர்கள், 500 துப்புரவுத் தொழிலாளர்கள் பணி புரிந்துவருகின்றனர். தமிழகம் முழுவதும் 5000 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு, ஊதியம் நிர்ணயம் செய்ய ஆய்வுசெய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

போராட்டத்துக்கு, மாநில துணைத்தலைவர் வீரையா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் வாசுகி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்டத் தலைவர் கார்த்திகைநாதன், மாவட்ட துணைத்தலைவர் அண்ணாத்துரை, ராமலிங்கம், செல்வராஜ், மருதி, சுதா, செய்யதுமுகம்மது ஆகியோர் பேசினார்கள். 500 மனுக்களை ஒன்றாகக் கட்டி, பெரிய பண்டலாக மனுவை ஆட்சியரிடம் வழங்கினார்கள். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!