வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (14/03/2018)

கடைசி தொடர்பு:08:28 (14/03/2018)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல்துறையினருக்கு பயிற்சி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுநகர் எஸ்.பி., ராஜராஜன்  தலைமையில் மாவட்டத்திலுள்ள காவல் அதிகாரிகளுக்கு திறன்வளர்ப்புப் பயிற்சி நேற்று நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் நலனுக்காகவும், சமூகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  எதிராக நடைபெறும் வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டும் சட்டங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பு நேற்று நடத்தப்பட்டது. 

குழந்தைகளுக்கு எதிரான

குழந்தைகள், மனதளவில் சமூகத்தாலும் பெற்றோராலும் எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் அன்பும் அரவணைப்பும் அளிக்கும் வகையில் சட்டங்களைத் தெரிந்துகொள்ள இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறைபடுத்தப்படுள்ள இளைஞர் நீதிசட்டம் 2015-ன்படி பயிற்சி அளிக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், சட்டத்துக்கு முரணாகக் குழந்தைகளைக் கையாளும்போது, குழந்தை நேயத்துடன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சட்டத்துக்கு முரண்படும் குழந்தைகளை காவல் அறையிலோ, சிறையிலோ வைக்கக் கூடாது.

குழந்தைகள்மீது வழக்குப்பதிவு செய்த விவரத்தை நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பெற்றோருக்கு உடனே தெரிவிக்க வேண்டும், குழந்தைகள் மீதான வழக்குகளை நான்கு மாத காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை, இளைஞர்களை  விடுவிக்க, பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்போர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க