வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (14/03/2018)

கடைசி தொடர்பு:08:07 (14/03/2018)

2020-ல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 67 லட்சத்தை எட்டுவார்கள்..! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

alagappa university

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இது, தமிழக பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து செல்லமுத்து அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசும்போது, "2020-ம் ஆண்டுக்குள், இந்தியா முழுவதும் 67 லட்சம் பேர் மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதில், 3.8 சதவிகிதம் பேர் குழந்தைகளாக இருப்பார்கள். இதற்கான காரணம், தற்போது வளர்ந்திருக்கும் புதிய டெக்னாலஜியான இணைதளம் மொபைல்போன்கள்தான்.

இந்தியா முழுவதும் மனநல மருத்துவர்கள் ஆறாயிரம் பேர்தான் இருக்கிறார்கள். 46 மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகங்கள் இயங்கிவருகின்றன. மன அழுத்தம், மன நலம் பாதிக்கக்கூடிய ஆணிவேராக இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இதற்கான பயிற்சிப் படிப்புகளைக் கற்பிக்கவேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறோம். பெற்றோர்கள், பிள்ளைகளைத் துன்புறுத்தக் கூடாது. தொடர்ந்து படிக்கவைப்பதும், நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களை வாட்டி எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு மனஅழுத்தம் கொடுக்காமல், சுதந்திரமாகப் படிக்கவைக்க வேண்டும். இந்தியாவிலேயே முதல் பல்கலைக்கழகமாக, அழகப்பா பல்கலைக்கழகத்தில்தான் மனநலம்குறித்து தனிப்பாடமாகக் கொண்டு வர இருக்கிறோம். அழகப்பா பல்கலைக்கழத்திலும் மற்றும் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் மாணவர் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன” என்றார். இந்த நிகழ்ச்சியில்,  அழகப்பா பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் சுப்பையா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க