வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/03/2018)

கடைசி தொடர்பு:14:48 (14/03/2018)

திண்டுக்கல்- விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை சோதனை ஓட்டம் மீ்ண்டும் தொடங்கியது!

ரயில்பாதை

திண்டுக்கல்- விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின்போது, இன்ஜின் பழுதானதால் சோதனை ஓட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல்- விழுப்புரத்துக்கு இடையே 273 கிலோ மீட்டர் தூரம் இரட்டை அகல ரயில்பாதைக்காக 1,626.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்தப் பணி பல்வேறு பிரச்னை காரணமாக திண்டுக்கல் அருகேயுள்ள தாமரைப்படி-கல்பட்டி சத்திரம் வரையில் தடைப்பட்டு இருந்தது. ஒருவழியாகத் தடை நீங்கி, அந்தப் பகுதியில் தண்டவாளம் அமைக்கப்பட்டுப் பணிகள் நிறைவு பெற்றன.

இந்நிலையில், இந்தப் பாதையில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று மாலை தாமரைப்பாடியில் இருந்து தங்கம்மாபட்டி வரை 130 கிலோ மீட்டர் வேகத்தில் இன்ஜினை இயக்கி ஆய்வு செய்யத் திட்டமிட்டனர். ஆனால், சோதனை ஓட்டத்துக்காகக் கொண்டு வரப்பட்ட மின்சார ரயில் இன்ஜின் பழுது காரணமாக இயங்கவில்லை. இதனால் சோதனை ஓட்டம் கைவிடப்பட்டு, இன்று காலை மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க