குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம்! #KuranganiForestFire

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து பேரிடர் மேலாண்மைத்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் விசாரிப்பார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.      

குரங்கணி தீ விபத்து

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குக் கடந்த 11-ம் தேதி சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது. 

இந்தநிலையில், குரங்கணி காட்டுத் தீ சம்பவம் குறித்து விசாரிக்க பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டதன் பின்னணி மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரி 2 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்பிக்கவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!