வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (14/03/2018)

இந்தியர்கள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கருத்து இதுதான்!

ஸ்டீபன் ஹாக்கிங் இந்தியாவுக்கும் ஒரு முறை வருகை தந்துள்ளார். 2001-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 16 நாள் இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டீபன் ஹாக்கிங் பயணம் மேற்கொள்வதற்கு என்றே பிரத்யேக வாகனத்தை மகிந்த்ரா நிறுவனம் உருவாக்கியிருந்தது.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

மும்பையில் நடந்த சர்வதேச இயற்பியலாளர்கள் மாநாட்டில் “The Universe in a Nutshell என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். டாடா அறிவியல் ஆராய்ச்சி மையம் வழங்கிய சரோஜினி தாமோதரன் விருது முதன்முதலில் இவருக்குதான் வழங்கப்பட்டது. மும்பையில் ஸ்டீபன் ஹாக்கிங் இருந்தபோது, அவருக்கு 59 வது பிறந்த நாள் (ஜனவரி-8) வந்தது. ஒபராய் ஹோட்டலில் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். மகிந்த்ரா நிறுவனம் வடிவமைத்திருந்த பிரத்யேக வாகனத்தில் மும்பை நகரைச் சுற்றிப் பார்த்தார்.

டெல்லி சென்ற அவர், அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ''இந்தியர்கள் கணக்கு  மற்றும் இயற்பியலில் வல்லவர்கள்'' என்று சர்டிஃபிகேட் கொடுத்தார். ''சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது'' என்று பின்னர் கே ஆர்.நாராயணன் குறிப்பிட்டார். மேலும், ''ஸ்டீபன் ஹாக்கிங் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதர்களுக்கும் முன்னுதாரணமானவர்'' என்றும் கே.ஆர்.நாராயணன் புகழாரம் சூட்டினார். டெல்லியில் ஜந்தர் மந்தர் வானியல் ஆய்வு மையம், குதுப்மினார் போன்றவற்றையும் பார்வையிட்ட ஹாக்கிங், டெல்லியில் ஆல்ஃபிரட் ஐன்ஸ்டின் நினைவு உரையாற்றினார். 'வருங்காலத்தைக் கணிப்பது வானசாஸ்திரத்தில் இருந்து கருந்துளைக்கு மாறி வருகிறது' என்கிற தலைப்பில் அவர் பேசினார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க