`90 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டார்' - தாட்கோ அதிகாரி மீது கலெக்டரிடம் மகளிர் குழு புகார்

தாட்கோ மூலம் மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடனுடன்கூடிய மானியம் வழங்குவதற்காக வந்த மானியப்பணம் சுமார் 90 லட்சத்தை தாட்கோ அதிகாரி கடன் வழங்குவதற்கு தகுதியற்றதாக பொய் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார் என்று  மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் குழு புகார்


இது குறித்து புகார் கொடுக்க மகளிர் குழுக்களை அழைத்து வந்திருந்த தாயகம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பழனியாண்டி பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயம் இன்றி வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் ஆடு வளர்க்கவும் பால்மாடு பண்ணை வைக்கவும் செங்கல்சூளை கரிமூட்டம் போன்ற தொழில்களைச் செய்வதற்காக வங்கியிடம் குழுக்களாகச் சேர்ந்து கடன் விண்ணப்பம் செய்திருந்தோம். மொத்தம் 60 குழுக்களுக்கு விண்ணப்பம் செய்திருந்தோம். அனைத்துக் குழுக்களுக்கும் வங்கி கடன் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று வங்கியிலிருந்து கடிதம் வந்துவிட்டது. ஒவ்வொரு குழவுக்கும் வங்கி வழங்கும் கடன் சுமார் 7 லட்சம். இதில் மானியம் இரண்டரை லட்சம். இந்நிலையில் தாட்கோ அதிகாரி சட்டநாதன் 25 `மகளிர் குழு’க்களுக்கு மட்டும் மானியத்தை விடுவிப்புச் செய்துவிட்டு மற்ற குழுக்களுக்கு அரசிடமிருந்து வந்திருந்த மானியத்தை அரசாங்கத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டார். அவ்வாறு அனுப்பிய மானியத்தை அரசிடமிருந்து திரும்பப் பெற்று மீதமிருக்கும் 35 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும்” என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!