வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (14/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (14/03/2018)

`தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2வது யூனிட் பழுது!' - 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2வது யூனிட்டில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவும், ஏற்கெனவே 5வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாலும் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி அடிப்படையிலான இந்தத் தூத்துக்குடி அனல்மின் நிலையம், இந்தியாவில் உள்ள பழைமையான அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி வீதம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள 1வது, 2வது மற்றும் 3வது ஆகிய 3 யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதனால், இந்த யூனிட்டுகளில் அவ்வப்போது பழுது ஏற்படு மின் உற்பத்தி தடைபடுகிறது. சிலநேரங்களில் தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைபட்டு வந்தது.

இந்நிலையில், இன்று 3வது யூனிட்டில் கொதிகலனில் திடீர் பழுது எற்பட்டது. மின் உற்பத்தி உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த சில நாள்களாக 5வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலைய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1979ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பழைமையான அனல்மின் நிலையத்தில், 5 யூனிட்டுகளுமே மறுபுனரமைப்பிற்காக காத்திருக்கின்றன. கோடைகாலம் தொடங்கவிருக்கும் நிலையில், இவ்வாறு கொதிகலனில் பழுது ஏற்பட்டும், தண்ணீர் பற்றாக்குறையாலும் யூனிட்டுகளில் மின் உற்பத்தி தடைபடுவது தொடர்ந்து வந்தால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க