ரன்னிங்கில் 5 பேரை கலங்கடித்த டயர்! கிணற்றில் கார் பாய்ந்து உயிர் தப்பிய அதிசயம்

கார்

திருப்பூர் மாவட்டம் அருகே நடைபெற்ற விபத்தில், சாலையோரக் கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தன்னுடைய மனைவி ராதாமணி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் உடுமலைப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில், பல்லடத்தை அடுத்துள்ள மந்திரிபாளையம் என்னும் இடத்தைக் கார் கடக்கும்போது, காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்திருக்கிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விவசாயி ஒருவருக்குச் சொந்தமான அந்தக் கிணற்றில் கார் விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஓடிச்சென்று காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் பகுதி தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி, காருடன் கிணற்றுக்குள் சிக்கித் தவித்த அனைவரையும் சிறு காயங்களுடன் மீட்டனர். கிணற்றில் தண்ணீர் வற்றியிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இச்சம்பவத்தால் சில மணி நேரம் உடுமலை சாலை பரபரப்புடன் காணப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!