புதிய தமிழகம் நிர்வாகி மீது தாக்குதல்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி சீனிவாசன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டுமென்று, கிருஷ்ணசாமி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் மதுரை - கொல்லம் நெடுஞ்சாலையில்  போக்குவரத்து ஸ்தம்பித்தது.

டாக்டர் கிருஷ்ணசாமி

கடந்த 8ம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ ஸ்டாண்டில் பிரச்னை ஏற்பட்டு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ சங்கத்தலைவர் சீனிவாசனை, சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது சம்பந்தமாக அவர் கொடுத்த புகாரில் நான்கு பேர் மீது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஏராளமானோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயாலாளர் சாமுவேல்ராஜ் உட்பட நிர்வாகிகள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சீனிவாசனை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் முக்கியப் புள்ளி ஒரு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!