`சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து திருடப்பட்ட நூல்களைக் கண்டுபிடியுங்கள்’ - எஸ்.பியிடம் புகார் கொடுத்த ஆர்வலர்கள்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் காணாமல் போன சோழர் கால ஓவியங்கள் மற்றும் அரிய வகை பொக்கிஷங்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என சமூக ஆர்வலரான வக்கீல் ஜீவகுமார், மேலும் சில வக்கீல்களோடு சேர்ந்து  எஸ்.பி.செந்தில்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் உலகப்புகழ் பெற்றது. இந்த நூலகத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளான இலக்கியங்கள் மற்றும் ஏராளமான ஓலைச்சுவடிகள் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாது வெளிநாட்டினர் கூட ஆய்வுகளுக்காக இங்கு வந்து குறிப்புகளை எடுத்து செல்கின்றனர்.

பல சிறப்புகளையுடைய இந்த நூலகம்  நாயக்கர் ஆட்சி காலத்தில் சரஸ்வதி பண்டார் என்ற பெயரில் மராட்டியர்கள் ஆட்சி காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. தஞ்சாவூரை ஆண்ட மன்னர் சரபோஜி, சரஸ்வதி மஹால் நூலகம் என பெயர் மாற்றம் செய்ததார். அப்போது அங்கு அரிய வகை நூல்களையும் சேகரித்து வைத்தார். அதில் முக்கியமானதாக கருதப்படும் சித்த மருத்துவம், ஆன்மீகம், ஜோதிடம் சம்பந்தபட்ட  நூல்களில் பல கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டுள்ளது. மேலும் நவரத்தின கற்கள் பதித்த சோழர்கால கிருஷ்ணர் படமும் திருடப்பட்டுள்ளது. இவற்றின்  மதிப்பு பல லட்சம் இருக்கும்.

ஜீவகுமார் புகார் மனுதரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் சீகன் பால்ஸ் என்பவர் தமிழ் அச்சுகூடத்தை நிறுவினார். பின்னர் 1810-ம் ஆண்டு  புதிய ஆகமங்களின் பங்கு என்ற நூலை அச்சிட்டு அதன் முதல் பிரதியை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கொடுத்தார். அந்த நூலை இங்கு கண்ணாடி கூண்டிற்குள் வைத்து பாதுகாத்ததோடு மக்கள் பார்வைக்கும் வைக்கபட்டிருந்தது.  கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி அரிய வகை பொக்கிஷமான புதிய ஆகமங்களின் பங்கு என்ற நூலை ஜெர்மனியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று வெளியே எடுத்து பார்த்ததோடு அதை படிமங்களும் எடுத்தனர்.

அன்று மாலை நூலக ஊழியர்கள் நூல்களை சரிபார்த்த போது அந்த நூலை காணவில்லை. இது குறித்து அப்போதே தஞ்சாவூர் மேற்கு போலீஸ் காவல்  நிலையத்தில் சரஸ்வதி மஹால் நூலகம் சார்பில் புகார் செய்யபட்டது.ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பெரிய கோவிலில் இருந்து காணமல் போன சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டு வருவது போல் சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட அரிய வகை பொக்கிஷங்களை திருடியவர்களை கண்டுபிடித்து அவற்றை மீட்பதோடு அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் ஜீவகுமார் தெரிவித்துள்ளார். சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடுபோன நூல்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. செவிசாய்க்குமா அரசு?.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!