வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (15/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (15/03/2018)

`குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தனி கவனத்துடன் சிகிச்சை’ - மதுரை ஆட்சியர் தகவல் #kuranganiForestFire

குரங்கணி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார். 

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்

தேனி மாவட்டத்தில் உள்ள   குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நபர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு முதல்வர் , துணை முதல்வர் மற்றும் பல்வேறு கட்சியினரும் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். விபத்து நடைபெற்ற மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தது முதல் மதுரை ஆட்சியர் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார் . நேற்று (14.3.2018) ஆய்வு மேற்கொண்ட மதுரை ஆட்சியர் வீரராகவராவ், ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில்,  "குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகென தனி வார்டு மற்றும் சிறப்பு மருத்துவக் கு ழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் காயமடைந்தவர்களின் பெற்றோர் விருப்பத்தின் பேரில் ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். தமிழக அரசின் உத்தரவுப்படி உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. அபாயகட்டத்தில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் மருத்துவக்குழுவின் அதிக கவனம் எடுத்து செயல்படுகின்றனர். மருத்துவமனை டீன் அனுமதி இல்லாமல் யாரும் தனி வார்டுக்கு செல்ல அனுமதி இல்லை. இதே நடைமுறை அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார்.