இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ.கவின் மீதான மக்கள் கோபத்தை எதிரொலிக்கிறது: ராகுல் கருத்து

க்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியானது, அக்கட்சி மீதான மக்கள் கோபத்தையே காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

ராகுல்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்புர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. அதேபோல, பீகாரின் அரோரியா தொகுதியில் பா.ஜ.கவை வீழ்த்தி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது. கோரக்பூர் மற்றும் புல்புர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 
“இடைத்தேர்தலில் பா.ஜ.க அல்லாத வேட்பாளருக்கு மக்கள் பெருமளவு ஆதரவு அளித்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜ.க மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வலிமையாக்க வேண்டியதிருக்கிறது. ஆனாலும், அது ஒரே இரவில் சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!