மேலூரும், ஆர்.கே நகரும்தான் எங்க சென்டிமென்ட் பிளேஸ் ! சி.ஆர் சரஸ்வதி பளிச்

தினகரனின் அமைப்பு மற்றும் கொடி அறிமுக விழாவில் கலந்துகொள்வதற்காக, முதல் நாள் இரவே தொண்டர்கள் மேலூர் எஸ்.பி.ஆர் மைதானத்தில் குவிந்தவண்ணம் இருக்கின்றனர். 

அப்போது, அங்கு தொண்டர்களைச் சந்தித்த தினகரன் அணி செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, தொண்டர்களின் செல்ஃபிக்கு இடையில் நம்மிடம் சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ''ஆர்.கே.நகரும் மேலூரும்தான் எங்கள் சென்டிமென்ட். அதனால்தான் இந்த இடத்தை மீண்டும் தேர்வுசெய்துள்ளோம். தினகரன், இனி எங்கு நின்றாலும் வெற்றிபெறுவது உறுதி. மேலூரில் ஏற்பட்ட எழுச்சி தான் தமிழகம் முழுவதும் பரவியது. தினகரனைப் பற்றி தப்புக் கணக்கு போட்டவர்கள் முகத்தில் கரிதான் பூசப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை தக்கவைக்கத்தான் தற்போது இந்த முன் ஏற்பாடு.

இதில் இருந்துகொண்டே, கட்சியையும் சின்னத்தையும் மீட்போம். ஆர்.கே நகரில் தினகரன் வெற்றிபெற்றது வரலாறு. 8 மணிக்கு அறிவித்த உடனே எழுச்சி கிளம்பியது. பல சூழ்ச்சியையும் கடந்து குக்கர் சின்னத்தில் வெற்றிபெற்றார். ஏறுவரிசையில்தான் இருந்தது அவரது வெற்றி. தொய்வே இல்லை. மீண்டும் அதே எழுச்சியைக் காணத்தான் மேலூரில் கூட்டம் நடத்திகிறோம். அம்மாவுக்குப் பிறகு இவர்தான் கட்சியை நடத்த முடியும். ஆட்சியைச் சரியாக நடத்த முடியும் என மக்கள் நன்றாகத் தெரிந்துகொண்டுள்ளனர். ஆட்சியும் காட்சியும் மாறும். விரைவில் தினகரன் அதை நிரூபிப்பார்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!