வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (15/03/2018)

கடைசி தொடர்பு:12:23 (15/03/2018)

இன்று தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்...! #TamilNaduBudget2018

தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல்செய்ய உள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்குறித்த அறிவிப்பை கடந்த 7-ம் தேதியன்று, சட்டசபைச் செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்தார். அதன்படி இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை காலை 10:30 மணிக்கு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல்செய்கிறார்.

சட்டசபையில் நிதிநிலை அறிக்கை படித்து முடித்த உடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவு பெறும். அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை விவாதிக்க, பேரவையின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் அடங்கிய அலுவல் கூட்டம், சபாநாயகர் தனபால்அலுவலகத்தில் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியவற்றை தமிழக அரசு எதிர்க்கொள்ள உள்ள நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பல புதிய திட்டங்கள் இடம்பெறக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசு அலுவலர்கள்,ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏற்கபட்ட நிலையில் இதனால் அரசிற்கு கூடுதல் நிதிசுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிதிசுமையை சரிசெய்ய வரிகள் உயர்வு, புதிய வரிகள் போன்றவை அறிமுகபடுத்தபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Read TN Budget 2018-19